மரித்த நீலத்திரை – எக்ஸ்பி – சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று

வணக்கம் நண்பர்களே .
     விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திரை’ என்று தமிழ்ப் படுத்தலாம் .
இந்த கட்டுரை , மரித்த நீலத்திரையில் சில வகை வாசகங்கள் தோன்றினால் , அந்த எரர்களை சரி செய்யும் வழிமுறைகளை பற்றியது .

முதலில் உங்களிடம் எக்ஸ்பி சிடி இருக்க வேண்டும் . இந்த கட்டுரை , உங்கள் டிரைவுகள் ‘என் டி எப் எஸ்’ ரக பார்மேட்டை கொண்டிருக்கும் என்ற தோரனையில் எழுதப்பட்டது . உங்களுடையது பேட் 32 ரகமாக இருப்பின் , சில வழிமுறைகள் மிச்சமாகும்.

முதலில் உங்கள் எரர் கீழ்கண்ட சொற்களை உடையதாக இருப்பின் , இந்த வழிமுறை கண்டிப்பாக வேலை செய்யும் . ஒரு வேலை எரர் மெஸேஜை படிக்க முடியாமல் வேகமாக ரீஸ்டார்ட் ஆனாலும் நீங்கள் இவ்வழிமுறையை முயற்சித்து பார்க்கலாம் .

Windows XP could not start because the following file is
missing or corrupt: \WINDOWS\SYSTEM32\CONFIG\SYSTEM


Windows XP could not start because the following file is missing
or corrupt: \WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE


Stop: c0000218 {Registry File Failure} The registry cannot load the hive
(file): \SystemRoot\System32\Config\SOFTWARE or its log or alternate

System error: Lsass.exe
When trying to update a password the
return status indicates that the value provided as the current password is not
correct.

இவைதானென்றில்லை , மேலும் சில வகை ரெஜிஸ்ட்ரி எரர்களுக்கும் இந்த முயற்சியை மேற்கொள்லலாம் . இனி ஆப்பரேசனுக்கு தயாராகுங்கள் .

முதற் பகுதி

 ரெக்கவரி கன்சோலுக்குள் செல்வது

   அதற்கு முதலில்

  •     கணினியை ரீஸ்டார்ட் செய்யுங்கள் . செய்யும்போது டெலீட் கீயை தட்டிக்கொண்டே இருங்கள் .
  •     இப்போது பையாஸ் மெனு வரும் . அதில் பூட் ஆப்சன்ஸ் சென்று பூட் டிவைஸ் பிரையாரிட்டியை முதலில் சிடியில் இருந்து பூட் செய்யுமாறு மாற்றி அமையுங்கள் .
  •     உங்கள் எக்ஸ்பி சிடியை சொருகி ரீஸ்டார்ட் செய்யுங்கள்
  •     உங்கள் “press any key to boot from cd …. ” என்று திரையில் வாசகம் தெரியும் . அப்போது ஏதாவது ஒரு கீயை தட்டி சிடியில் இருந்து பூட் செய்ய சொல்லுங்கள்
  •     கொஞ்ச நேரம் டிவைஸ் டிரைவர்கள் எல்லாம் லோட் ஆகும் .
  •     பிறகு உங்களிடம் புதிதாக விண்டோஸ் இன்ஸ்டால் செய்யவா அல்லது ரிப்பேர் செய்யவா என்று கேட்கும் . ‘ஆர்’ பட்டனை அழுத்தி ரிப்பேர் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும் .


நீங்கள் அனேகமாக ரெக்கவரி கண்சோலுக்குள் நுழைந்து விடுவீர்கள் .

பின்னர் உங்களின் எந்த இன்ஸ்டாலேசனை சரி செய்ய வேண்டுமோ அதற்குள் நுழையுங்கள் . பாஸ்வேர்டு கேட்கும் , கொடுங்கள் . பெரும்பாலான கணினிகளில் இது பிளாங்க் ஆக இருக்கும் .

பிறகு கீழ்கண்ட கமாண்டுகளை தேவையான ஸ்பேஸ் விட்டு , உள்ளது உள்ளபடி ,
தட்டுங்கள் . இதில் C:\ கோலன் என்பது உங்கள் இயங்குதளத்தின் ரூட் பாத் . அதாவெது நீங்கள் ‘ஐ’ டிரைவில் விண்டோசை நிறுவியிருந்தால் “c:\” பதில் “I:\” என்று மாற்றிதட்ட வேண்டும் .

md tmp

copy C:\windows\system32\config\system C:\windows\tmp\system.bak

copy C:\windows\system32\config\software C:\windows\tmp\software.bak

copy C:\windows\system32\config\sam C:\windows\tmp\sam.bak

copy C:\windows\system32\config\security C:\windows\tmp\security.bak

copy C:\windows\system32\config\default C:\windows\tmp\default.bak

delete C:\windows\system32\config\system

delete C:\windows\system32\config\software

delete C:\windows\system32\config\Sam

delete C:\windows\system32\config\security

delete C:\windows\system32\config\default

copy C:\windows\repair\system C:\windows\system32\config\system

copy C:\windows\repair\software C:\windows\system32\config\software

copy C:\windows\repair\sam C:\windows\system32\config\sam

copy C:\windows\repair\security C:\windows\system32\config\security

copy C:\windows\repair\default C:\windows\system32\config\default

ஒவ்வொரு வரியை டைப் செய்தவுடன் என்டர் கீயை தட்டவும் . இதில் எல்லா ‘காப்பி’ கமாண்டுகளும் “பைல் காப்பீட்” என்ற மெஸேஜை வெற்றிகரமாக எக்சிக்யூட் ஆனவுடன் தரும் . “டெலீட்” கமாண்டுகள் எந்த அடையாளமும் காட்டாமல் அடுத்த பிராம்ப்டுக்கு சென்றுவிடும் .

இப்போது

EXIT
என்று அடியுங்கள் . இது சிஸ்டத்தை ரீஸ்டார்ட் செய்யும் . உங்கள் சிடியை வெளியில் எடுக்க வேண்டாம் , பிறகு அதில் வேலையி்ருக்கிறது .

சிஸ்டம் ரீஸ்டார்ட் ஆகும்போது மீண்டும் உங்களிடம் “பிரஸ் எனி கீ ” என்று கேட்கும் , எதையும் அழுத்தாமல் வேடிக்கை மட்டும் பாருங்கள் . உங்கள் சிஸ்டம் தற்பொழுது  பூட் ஆகி GUI  வரை செல்ல வேண்டும் . அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் யாராவது அனுபவசாலியை பக்கத்தில் வைத்து சரிசெய்யவும் , அல்லது சர்வீஸ் சென்டரை கூப்பிடவும்.

பகுதி இரண்டு எழுத கொஞ்சம் போரடிக்கிறது நண்பர்களே , கொஞ்ச நேரம் கழித்து அதை எழுதுகிறேன் . சரியா . தற்போதைக்கு உங்கள் கணினி வேலை செய்யும் நிலையை எட்டி யிருக்கும் . ஆனால் முழுமையாக இன்னும் உங்கள் பழைய செட்டிங்குகள் , சாப்ட்வேர்களை ரீஸ்டோர் செய்வதை அடுத்த பதிவில் காண்போம் .
அடுத்த பதிவு வரும் வரை பொறுமை யில்லாதவர்கள்  கீழ்கண்ட ஆங்கில பக்கங்களை தயவு செய்து முழுவதுமாக படித்துவிட்டு வேலையை ஆரம்பிக்கவும் . இல்லையன்றால் பாதியில் மாட்டிக்கொள்ள நேரிடும் .

http://proccy.blogspot.com/2006/10/dealing-blue-screens-deal-that-they.html

http://support.microsoft.com/kb/307545

.

இரண்டாம் பாகத்தில் சந்திப்போம் .

powered by performancing firefox

Advertisements

விண்டோஸ் எக்ஸ்புளோரருக்கு மாற்று மென்பொருட்கள்

சற்று நேரம் முன்பு delicious’ல் மேய்ந்து கொண்டிருந்த போது இந்த பக்கம் கண்ணில் பட்டது .நமக்கு விண்டோஸ் எக்ஸ்புளோரர் போரடித்து போனால் உபயோகிக்க மாற்று பைல் பிரவுஸர்க்களின் பட்டியலை அளித்திருக்கிறார்கள் ..

இதில் முதலில் இலவச சாப்ட்வேர்களை பற்றி மட்டும் பார்ப்போம் .

A43 :
வலைத்தளம் செல்ல இங்கே கிளிக்கவும்

உபயோகிக்க கொஞ்சம் ரேம் மெமரி எடுத்துக்கொண்டாலும் , வேகமான ரெஸ்பான்ஸ் டைம் உண்டு . முக்கியமாக இதை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை . ஒரு லொக்கல் *.INI பைலில் இதன் செட்ட்டிங்க்குகள் சேமித்து வைக்க ப்பட்டிருக்கும் . ஆகவேஎ பென் டிரைவ் , அல்லது பிளாப்பி டிரைவில் அடக்கி வைத்து எந்த கணி்னியிலும் உபயோகிக்க முடியும் . அதிகமாக ஜிப் , ரேர் ஆகிய கம்பிரஸன் சாப்ட்வேர் உபயோகிப்பவர்களுக்கு மிகவும் வசதி்யானது .

கியூபிக் எக்ஸ்புளோரர்

பெறுவதற்கு சொடுக்கவும்

கிட்டத்தட்ட ACDsee போன்ற இன்டெர்பேஸுடன் இருக்கும் இதில் புக்மார்க்குகள் , தம்ப் நெயில்கள் மற்றூம் ஒரு டெக்ஸ்ட்எடிட்டர் போன்ற வசதிகள் உள்ளன

எக்ஸ்புளோரர் எக்ஸ்பி

பதிவிறக்க

பல பைல்களை ஒரே நேரத்தில் பெயர் மாற்றும் வசதி உண்டு . டவுன்லோட் சைஸ் 410 கே பி மட்டுமே .எக்ஸ்புளோரர் பிரியர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் .

பிரீ கமான்டர்

பெற்றுக்கொள்ள

சிஸ்டம் போல்டர்களை எளிதாக அனுக முடியும் . MD5 செக்சம்களை உருவாக்கவும் சரிபார்க்கவும் வசதிகள் உண்டு . டாஸ் கமாண்ட் பிராம்ப்ட் ஒருங்கினைக்கப்பட்டுள்ளது .

எக்ஸ் ப்ளோரர்

பதிவு + இறக்கம்

மிக வேகமான மென்பொருள் . சிறிய சைஸ் . பிளாப்பி , யூஎஸ் பி டிரைவ்களில் இருந்து இயக்க முடியும் . வின்டோஸ்எக்ஸ்புலோரரை விட பல மடங்கு மேம்பட்டதாக இருக்கிறது .

இன்னும் பல இருக்கின்றன . முழு ரெவ்யூவிற்கு கீழ்கண்ட லிங்கை தொடரவும் .

http://www.simplehelp.net/2006/10/11/10-windows-explorer-alternatives-compared-and-reviewed/#cubic

powered by performancing firefox

மைக்ரோசாப்ட் ரெக்கவரி கன்சோல் – விண்டோஸ் எக்ஸ்பி . நிறுவுதல்

    உங்களுக்கு விண்டோஸ் எக்ஸ்பியில் ‘ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத்’ ரக தொந்தரவுகளும் , மற்றும் இன்ன பிற ஸ்டார்ட்டப் பிரச்சனைகள் , லாகின் தொந்திரவுகள் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தால் , நீங்கள் மறக்காமல் நிறுவ வேண்டிய மென்பொருள் விண்டோஸ் ரெக்கவரி கன்சோல் .

    அடம்பிடிக்கும் ஒரு எக்ஸ்பி இயங்குதளத்தை வழிக்கு கொண்டுவர ரீஇன்ஸ்டால் செய்வதற்க்கு முன் ஒரு கடைசி முயற்சி கொடுத்து சரி செய்வதற்கு இந்த ரெக்கவரி கண்ஸோல் உதவும் .

    இதை நிறுவுவதற்கு முதலில் விந்டோஸ் எக்ஸ்பி சிடியை எடுத்துக்கொள்ளுங்கள் . 

1) முதலில் சிடியை கணினியில் இட்டு ஸ்டார்ட் -> ரன் , தேர்ந்தெடுங்கள் .
2) வருகிற ரன் டயலாக் பாக்ஸில் CD-ROM drive letter:\i386\winnt32.exe /cmdcons என்று டைப்புங்கள் . [ கவனிக்க : இங்கே CD-ROM drive letter என்றிருக்கும் இடத்தில் உங்களுடைய சிடி அல்லது டிவிடி டிரைவின் எழுத்தை கொடுக்க வேண்டும் .

3)இப்பொழுது வரும் டயலாக் பாக்ஸின் தகவல்களை பின்பற்றி “பினிஷ்”  கொடுங்கள் .

    இது உங்கள் கணினியில் ரெக்கவரி கன்சோலை நிறுவி விடும் .
உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்தீர்களென்றால் டீபால்டாக முப்பது நொடிகளுக்கு உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பியை பூட் செய்யவா அல்லது ரெக்கவரி கன்சோலை பூட் செய்யவா என்ற மெனு வந்திருக்கும் .

    ரெக்கவரி கன்சோலை உபயோகிக்க உங்களுக்கு அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்டு தெரிந்திருக்க வேண்டும் .

    தற்போதைக்கு இவ்வளவுதான். ” மரித்த நீலத்திரை ” யை ரெக்கவரி கன்ஸோல் வைத்து சமாளிக்கும் விதத்தை பிறிதொரு பதிவில் காண்போம் .

    வணக்கம் .

powered by performancing firefox

மீபோ – சாட் கிளையன்ட்

மீபோ என்பது ஒரு இனையதளம் . அதில் ஏ.ஐ.எம் ,ஐ.சி.கியூ ,யாஹூ ,ஜாபர் ,ஜிடால்க் (ஜிமெயில்) , எம்.எஸ்.என் ஆகியவற்றின் சாட் அல்லது இனைய அரட்டை வசதியை அளிக்கின்றார்கள் .

குறிப்பாக , எந்த ஒரு மென்பொருளையும் நிறுவும் அதிகாரமில்லாத பயனர்கள் தங்கள் அலுவலக கணிப்பொறிகளில் சாட் செய்து பொழுது போக்க இந்த தளத்தை உபயோகித்துக்கொள்ளலாம் .

ஆனால் உங்கள் கம்பியூட்டர் அட்மினிஸ்டிரேட்ட்ர் புத்திசாலியாக இருந்தால் இந்த தளத்தை தடை செய்து வைத்திருப்பார் . ஆகவே ஏதேனும் ஒரு பிராக்ஸி செர்வரை உபயோகித்து ஏமாற்றவும் . இந்த தளத்தை http://www21.meebo.com/ என்ற முகவரியில் சென்றடையலாம் .

லைவ் சிடி -நிகழ்வுநிலை குறுவட்டு

நமக்கு தெரிந்தவரை ஒருகணிப்பொறி இயக்கப்பட்டவுடன் முதலில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனப்படும் புரோக்ராம்களை தன்னுடைய ஹார்ட் டிஸ்க்கிலிருந்து ஞாப்க அடுக்குகளில் ஏற்றிக்கொள்ளும் . பிறகு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் முறையில் சில பைல்களை இயக்க ஆரம்பிக்கும் . இந்த பைல்கள் கனிப்பொறியின் ஹார்டுவேர்களை சரிபார்க்கும் , டிரைவர் பைல்களை ஞாபகத்திற்க்கு ஏற்றும் , நாம் உபயோகிக்கும் புரோக்ராம் களுக்கு தேவையான லைப்ரரி பைல்களை தயார்படுத்தும் . இவையனைத்தும் ஒரு சாதாரன ,ஹார்ட் டிஸ்கில் இருக்கும இயங்குதளம் வழக்கமாக செய்பவை .

லைவ் சிடி என்பது இதே தத்துவத்தில் செய்யப்படுவதுதான் , ஆனால் இங்கே அடிப்படையில் சில மாற்றங்கள் இருக்கும் . ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள் ஹார்ட் டிஸ்கில் இருப்பதற்கு பதிலாக ஒரு சிடியில் இருக்கும் . இந்த சிடியை கணினியில் போட்டு ரீஸ்டார்ட் செய்து , பையாஸ் செட்டிங்குகளில் “பூட் ப்ரம் சிடி ரோம்” என்பதை தேர்ந்தெடுத்தால் , நமக்கு சிடியில் இருந்து பூட்டிங் ப்ராஸஸ் ஆரம்பமாகும் .

இந்த குறுவட்டுகளில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள் மிகவும் அதிக சதவீதத்தில் கம்பிரஸ் செய்யப்பட்டவை . இவை ரேம் மெமரியில் அன்கம்பிரஸ் ஆகும் . பிறகு ரேம் மை ஒரு டிஸ்க் டிரைவாக கணினி டிரைவர் பைல்களுக்கு அறிவிக்கும் , பின்னர் புரோக்ராம் பைல்களை அங்கிருந்து செயற்படுத்த ஆரம்பிக்க்கும் .

நம்முடைய பெரும்பாலான பூட் டிஸ்குகள் இந்த தந்திரத்தை நீண்ட நாளாக உபயோகித்து வந்தன . குறிப்பாக சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை இன்ஸ்டால் செய்யும்போது ஓடும் பல புரோக்ராம்கள் இந்த வழிமுறையை பின்பற்றுபவை .

ஓப்பன் சோர்ஸ் அங்கத்தின் உறுப்பினர்கள் இந்த வித்தையை ஆராய்ந்து மேம்படுத்தியதன் விளைவாக , இன்று நூற்றுக்கும் மேற்பட்ட லைவ் சிடிக்கள் இனையத்தில் கிடைக்கின்றன . விண்டோஸின் இடை முகப்பு அல்லது யூஸர் இந்டர்பேஸுடன்கூட ஒரு லைவ்சிடி இருப்பதாக கேள்வி . உங்களுக்கு ஒரு லைவ் சிடியை உபயோகித்துபார்க்க ஆர்வமிருப்பின்

shipit.ubuntu.com

www.frozentech.com/content/livecd.php

ஆகிய தளங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

அதிலும் உபுன்டு ,குபுன்டுஆகியலினக்ஸ்லைவ்சிடி க்களை இலவசமாகவீட்டிற்கே அனுப்பிவைக்கிறார்கள் .

முதற் பதிவு – அறிமுகம்

வணக்கம்நன்பர்களே ,

இது என் முதற் பதிவு . எனக்கு தெரிந்த கணினி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் , தீர்வுகள் , வழிமுறைக்களை பகிர்ந்துகொள்வதற்காக இத்தளத்தை உபயோகிக்க உள்ளேன் . நானொன்றும் கணிப்பொறி வல்லுநன் இல்லை , ஆனால் ஆர்வம் உடையவன் . அதைவிட ஏதாவது ( நாமாவது ) தமிழில் உருப்படியாக ஒரு தளத்தை உருவாக்கி , அரசியல் , சாதி , மத சண்டைகளில் இருந்து வேறுபட்ட தலைப்பு கொண்ட தளத்தை உருவாக்குவோமே , என்றுதான் இந்த தளத்தை உருவாக்கியுள்ளேன் . இனி , இந்த முயற்சி எவ்வளவு தூரம் போகுமென்பதை பொறுத்தி்ருந்து பார்ப்போம் .