பெர்பார்மென்சிங் – பிளாக்கர் விசிட்டர் என்னிக்கை அறிய .

வணக்கம் நண்பர்களே ,
வேர்டு பிரஸ் தளத்தில் பிளாக் வைத்திருப்பவர்களுக்கு அவர்களே விசிட்டர்கள் என்னிக்கை அறிய டேஷ்போர்டில் வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள் . நாம் இப்போது பார்க்கப்போவது பிளாக்கர்.காம் யூசர்களுக்காக .

பயர்பாக்ஸ் பிரவுசர் பயனாளர்கள் , பயர்பாக்ஸ் வெப்சைட்டில் பல வகையான புரோக்ராம்களை பெற்று பிரவுசருடன் இனைத்துக்கொள்ள முடியும் . இந்த சின்ன புரோக்ராம்களை அங்கே எக்ஸ்டென்ஷன் என்று அழைக்கிறார்கள் .

உண்மையில் புரோக்ராம் போடத்தெரிந்த யார் வேண்டுமென்றாலும் தங்களுக்கே தங்களுக்கென்று ஒரு எக்ஸ்டென்ஷனை உருவாக்கிக்கொள்ள முடியும் .

இங்கே கிளிக்கினால் பயர்பாக்ஸ்எக்ஸ்டென்ஷன் டவுன்லோட் சைட்டிற்க்கு செல்ல முடியும் .

இப்படியாக நான் அதில் உலாத்திக்கொண்டிருந்த போது பார்த்ததுதான் பெர்பார்மென்சிங் .

பெர்பார்மென்சிங் என்பது ஒரு பிரவுசருடன் ஒன்றினைக்கப்பட்ட பிளாக் போஸ்டிங் எடிட்டர் . அதாவது , நீங்கள் உங்கள் பிளாக்கில் போஸ்ட் செய்ய வேண்டிய கன்டென்ட்டுகளை பிளாக்கர் . காம் வெப்சைட்டில் ஆன்லைனில்தான் டைப் செய்ய வேண்டும்என்பதில்லை . இந்த டூல் நீங்கள் டைப் செய்ய நோட்பேட் போன்ற ஒருஎடிட்டரை கொடுத்துவிடும் . அதில் டைப் செய்து , பிளாக்கர் வெப்சைட்டிர்க்கு செல்லாமலே நம்முடைய கன்டென்டை போஸ்ட் செய்ய முடியும் .
அதாவது ஒவ்வொரு முறையும் சைட் அட்ரஸ் அடித்து -> சைன் இன் செய்து => கிரியேட் நியூ போஸ்ட் -> டைப் -> பப்ளிஷ்என்று செய்ய தேவையில்லை . மாறாக இதில் டைப் செய்து பப்ளிஷ் கொடுத்தால் நம் பிளாகில் பப்ளிஷ் ஆகிவிடும் . அதற்கு கொஞ்சம் இதை கான்பிகர் செய்து வைத்தால் போதுமானது .

பெர்பார்மென்சிங் பெற இங்கே கிளிக்கவும்

இந்தஎக்ஸ்டென்ஷன் பயர்பாக்ஸ் பிரவுசருக்குள் கீழ் ரைட் ( வலதா / இடதா ??) மூலையில் ஒரு நோட்பேட் ஐகான் ஒன்றை உருவாக்கும் . அந்த ஐகானை கிளிக் செய்தால் ஒரு சின்ன நோட்பேட் போன்றஎடிட்டர் பிரவுசருக்குள் திறக்கும் . அதில் ரைட் சைடில் பிளாக்ஸ்என்ற பெட்டிக்கு கீழே இருக்கும் “ஆட்” பட்டனை கிளிக் செய்தால் , நமது பிளாக்கின் முகவரியை கேட்கும் . அதன் வழிமுறைகளை பின் தொடர்ந்தால் நமது பிளாக் பெர்பார்மென்சிங்கிற்காக கான்பிகர் ஆகிவிடும் .

இதில் பிளாக்கர்.காம் பயனர் ஸ்பெஷல் என்பது மெட்ரிக்ஸ்என்ற வசதி . பெர்பார்மென்ஷிங் வெப்சைட்டில் நீங்கள் இதற்க்கு தனியாக ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும் . அதில் கூறியுள்ள நிரல் கோடிங்கை உங்கள் லே அவுட் கோடிங்குடன் இனைத்தால் , மெட்ரிக்ஸ் உங்கள் தளத்துடன் இனைந்து விடும் . இது பின்னனியில் இயங்கி உங்கள் பிளாகிற்கு வருகை தரும் ஆசாமிகளின் தேசம் , கணினிச் சூழல் , தேதி போன்றவற்றை கவனித்து பதிவு செய்ய ஆரம்பித்துவிடும் . பின்னர் நீங்கள் மெட்ரிக்ஸில் ரெஜிஸ்டர் செய்த ஐடியில் சைன் இன் செய்து இந்த தகவல்களை பார்க்கமுடியும் .

மெட்ரிக்ஸ் தம்ப் நெய்ல்
விஸிட்டர்கள் எதை கிளிக் செய்ததன் வழியாக வந்தார்கள் என்ற ரெபரர் தகவல்களை கூட பார்க்க முடியும் .

ஆனால் வேர்டு பிரஸ் பிளாகில் இதை கான்பிகர் செய்ய முயன்ற போது தோல்விதான் கிட்டியது . அதனால்என்ன , நமக்கு இவர்கள் அந்த வசதியை டீபால்டாகவே கொடுத்திருக்கிறார்களே .

powered by performancing firefox

Advertisements