நெட்டில் நேரம் கொல்வதற்கான தளங்கள்

தகவல் – பொழுதுபோக்கு – கருத்து யுத்தம்(அடிதடி) – போர்ன் – நட்பு – வேலைக்கு டிமிக்கி  கொடுக்க


தகவல்
– பொழுதுபோக்கு – கருத்து யுத்தம்(அடிதடி) – வேலைக்கு டிமிக்கி  கொடுக்க

 • டெலிசியஸ் – delicious.com
 • டிக்க் – digg.com
 • ஸ்டம்பிள்அபான் – stumbleupon.com -குறிப்பாக பயர்பாக்ஸ் ஆட்-ஆன் இன்ஸ்டால் செய்துவிட்டால் சிறப்பு –  ரெஜிஸ்ட்ரேசன் தேவை

தகவல் – பொழுதுபோக்குகருத்து யுத்தம்(அடிதடி) –  வேலைக்கு டிமிக்கி  கொடுக்க

 • தமிழ் வலைப்பதிவுகள் – எப்பவும் எதையாவது அடிச்சுகிட்டே இருப்பாய்ங்க
 • தமிழ் ட்விட்டர்கள் – twitter.com #tamil அல்லது #தமிழ்

தகவல் – பொழுதுபோக்கு – கருத்து யுத்தம்(அடிதடி) – நட்பு – வேலைக்கு டிமிக்கி  கொடுக்க

தகவல் – பொழுதுபோக்கு –  வேலைக்கு டிமிக்கி  கொடுக்க

 • விக்கிபீடியா – wiki

பொழுதுபோக்கு –  வேலைக்கு டிமிக்கி  கொடுக்க

 • என்சய்க்ளோ பீடியா டிராமாடிகா – EncyclopediaDramatica – இந்தியாவை பற்றிய ஒரு கதையை படிக்க சொடுக்கிப்பாருங்கள்
 • கிராக்ட் – cracked.com

– உங்களுக்கு பிடித்ததை கமென்ட்டில் போடுங்கள்

Advertisements

µ ☼ சிறப்பு எழுத்துவடிவங்கள் – ஆல்ட் கோட்’கள் (Alt Code’s ) ™ ©

வணக்கம் . வந்தனம் .

நீங்கள் கணிதவியல் சம்பந்தமாக எப்பொழுதாவது µ , ™ , © , ¹ , ² , ³ , ± , ½ , ¾ , ÷ போன்ற எழுத்து வடிவங்களை உருவாக்குவது எப்படி என்று தலை பிய்த்துக்கொண்டதுண்டா . விண்டோசில் ” கேரக்டர் மேப் ” இல் இருந்து இவற்றை கொண்டு வந்து நமது கோப்புகளில் சொருக முடியும் என்றாலும் , அது கொஞ்சம் நச்சு வேலை . ஒரு கேரக்டரை எடுக்க நாலைந்து வேலை செய்ய வேண்டும் . தலையை சுற்றி மூக்கை தொடுவதற்க்கு பதிலாக அதற்க்கான ஷார்ட்கட்’களை தட்டினால் நமக்கு வேலை சுலபமாக முடியுமல்லவா .

இதோ குறித்து வைத்துக்கொள்ளுங்கள் . . இந்த முறைக்கு ஆல்ட் கோட்(Alt Code) என்று பெயர் . இவற்றை உருவாக்க உங்கள்ஆல்ட்வி்சையை அழுத்திப் பிடித்துக்கொண்டு , நம்பேடில்(NUM PAD) [ ஆங்கில எழுத்துகளுக்கு மேலே இருக்கும் எண் விசைகளை அல்ல ] எண்களை குறிப்பிட்ட வரிசையில் தட்ட வேண்டும் .

சும்மா தட்டி பார்க்க ஒரு நோட்பேடை ஓப்பன் செய்து கீழ்கண்ட வரிசைகளை தட்டிப்பாருங்கள் .

உதா .

Alt அழுத்திக்கொண்டு 0188 நம் பேடில் தட்டினால் ¼ கிடைக்கும் .

Alt 0188 ¼

Alt 0128 €

Alt 0252 ü

Alt 0129 

Alt 0130 ‚

Alt 0131 ƒ

Alt 0132 „

Alt 0253 ý

Alt 0133 …

Alt 0134 †

Alt 0135 ‡

Alt 0136 ˆ

Alt 0254 þ

Alt 0137 ‰

Alt 0138 Š

Alt 0139 ‹

Alt 0140 Œ

Alt 0255 ÿ

Alt 0141 

Alt 0142 Ž

Alt 0143 

Alt 0144 

Alt 0248 ø

Alt 0145 ‘

Alt 0146 ’

Alt 0147 “

Alt 0148 “

Alt 0249 ù

Alt 0149 •

Alt 0150 –

Alt 0151 —

Alt 0152 ˜

Alt 0250 ú

Alt 0153 ™

Alt 0154 š

Alt 0155 ›

Alt 0156 œ

Alt 0251 û

Alt 0157 

Alt 0158 ž

Alt 0159 Ÿ

Alt 0160

Alt 0244 ô

Alt 0161 ¡

Alt 0162 ¢

Alt 0163 £

Alt 0164 ¤

Alt 0245 õ

Alt 0165 ¥

Alt 0166 ¦

Alt 0167 §

Alt 0168 ¨

Alt 0246 ö

Alt 0169 ©

Alt 0170 ª

Alt 0171 «

Alt 0172 ¬

Alt 0247 ÷

Alt 0173 ­

Alt 0174 ®

Alt 0175 ¯

Alt 0176 °

Alt 0240 ð

Alt 0177 ±

Alt 0178 ²

Alt 0179 ³

Alt 0180 ´

Alt 0241 ñ

Alt 0181 µ

Alt 0182 ¶

Alt 0183 ·

Alt 0184 ¸

Alt 0242 ò

Alt 0185 ¹

Alt 0186 º

Alt 0187 »

Alt 0188 ¼

Alt 0243 ó

Alt 0189 ½

Alt 0190 ¾

Alt 0191 ¿

Alt 0192 À

Alt 0236 ì

Alt 0193 Á

Alt 0194 Â

Alt 0195 Ã

Alt 0196 Ä

Alt 0237 í

Alt 0197 Å

Alt 0198 Æ

Alt 0199 Ç

Alt 0200 È

Alt 0238 î

Alt 0201 É

Alt 0202 Ê

Alt 0203 Ë

Alt 0204 Ì

Alt 0239 ï

Alt 0205 Í

Alt 0206 Î

Alt 0207 Ï

Alt 0208 Ð

Alt 0232 è

Alt 0209 Ñ

Alt 0210 Ò

Alt 0211 Ó

Alt 0212 Ô

Alt 0233 é

Alt 0213 Õ

Alt 0214 Ö

Alt 0215 ×

Alt 0216 Ø

Alt 0234 ê

Alt 0217 Ù

Alt 0218 Ú

Alt 0219 Û

Alt 0220 Ü

Alt 0235 ë

Alt 0221 Ý

Alt 0222 Þ

Alt 0223 ß

Alt 0224 à

Alt 0231 ç

Alt 0225 á

Alt 0226 â

Alt 0227 ã

Alt 0228 ä

Alt 0230 æ

Alt 0229 å

இந்த பிடிஎஃப் பைலில் முழு கோட்களும் உள்ளன . «« உங்கள் »» கம்பெனி செலவில் பிரிண்டவுட் எடுத்து பயன்பெறுவீராக . .

கீழ்கண்ட வழிமுறையை சந்தேகமாக கேட்டிருந்ததற்க்கு மணியன்  அவர்களுக்கு நன்றி.

மடிக்கணினிகளில் இவற்றை உபயோகப்படுத்த

நீங்கள் செய்யவேண்டியது

╞) “function” அல்லது “fn” என்று குறிப்பிடப்பட்ட விசையை தேடிப்பிடிக்கவும் . «கீழ்வரிசை வலது அல்லது இடது ஓரத்தில் பெரும்பாலும் இருக்கும்» . இப்பொழுது அழுத்த வேண்டாம் .

╘) அதேபோல “நம்லாக்” விசையையும் தேடிப்பிடிக்கவும் . இரண்டும் ஒரே நிறத்தில் இருக்கவேண்டும் .

►) இப்பொழுது அந்த குறிப்பிட்ட நிறத்திலுள்ள “function” அல்லது “fn” விசையை அழுத்திப்பிடித்துக்கொண்டு , நம்லாக் விசையை ஒரு முறை அழுத்தி பிறகு விட்டுவிடவும் .
Þ) பிறகு நன்றாக விசைப்பலகையை ஆராய்ந்தீர்களானால் சில விசைகளில் மட்டும் fn , நம்லாக் , எந்த நிறத்தில் இருந்ததோ , அதே நிறத்தில் சில எண்கள் பொறிக்கப்பட்டிருப்பதை கவனிக்க முடியும் .. வழக்கமாக இது “U”,”I”,”O”,”P”,”J”,”K”,”L”,”M” ஆகிய விசைகளில் இருக்கும் .

இந்த விசைகளை உபயோகித்து ஆல்ட் கோடுகளை உள்ளீடு செய்தீர்களானால் உங்களுக்கு வேண்டிய சிறப்பு எழுத்துருக்கள் கிடைக்கும் .

மீண்டும் ஆங்கில/தமிழ் தட்டச்சிற்க்கு மாற அந்த நம்லாக் விசையை இன்னொருமுறை அழுத்தி விட்டு விடுங்கள் . அவ்வளவுதான் . 🙂

Û காப்பி அடிக்கப்பட்ட இடம் Þ

நன்றி . .

ஸ்பெஷல் தாங்ஸ் டூ

µஐ எப்படி ஒரு வெப்சைட் அட்ரசாக கொண்டுபோய் இவுனுக ரெஜிஸ்டர் பன்னுனானுக என்று { திருட்டு சாஃப்ட்வேரை டோரண்ட்டில் களவாடிய வேலையில் } என்னை சிந்தித்து செயலாற்ற வைத்த µடோரன்ட்.காமிற்க்கு , இந்த வலைப்பூவை புதுப்பித்ததால் உண்டான புண்ணியம் போய்ச்சேரட்டும் . நன்றிகள் பல .

ரேம் பிரச்சனைகள் :

Fatal Exception 0x has occurred at xxxx:xxxxxxx

வீட்டுக் கணினி பயனாளர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளுள் ஒன்று கீழ்கண்ட “எரர் மெசேஜ்” , ஒரு நீலத்திரையில் “Fatal Exception 0x has occurred at xxxx:xxxxxxx“எனற வகையில் சில ஹெக்ஸாடெசிமல் எண்கள் குறிப்பிடப்பட்டு நாம்
செய்து கொண்டுள்ள வேலையை கெடுத்து ,எங்கே பிரச்சனை , ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலா அல்லது வேறெங்குமா என்று குழம்ப வைக்கும் .

மேற்கண்ட வகையறா எரர் மெசேஜ் , விண்டோஸ் வகை ஆப்பரேட்டிங் சிஸ்டம் வைத்திருப்பவர்களுக்கு , லினக்ஸ் பயனாளர்கள் கெர்னல் லோட் ஆகும்போது இதே போல சில அட்ரஸ் ரேஞ்சுகளை உற்றுக்கவணித்தால் பார்க்கலாம் , சில நேரங்களில் “கெர்னல் பேனிக்”எரர் மெசேஜும் கிடைக்கும் .
சரி இப்போது இந்த வகை எரர் மெசேஜுகள் எதனால் வருகின்றன என்று பார்ப்போம் .
கள்வர் காம்போனென்ட்

இந்த வகை எரர் கோடுகள் பெரும்பாலும் ரேம் பழதடைந்தாலோ அல்லது ரேமிலுள்ள தகவலை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தால் திரும்ப பெற முடியாமல் போனாலோ கிடைக்கும் .

அல்லது பிரச்சனை உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டாலேசன் சம்பந்தமாக இருக்கலாம் .
முதலில் உங்களுக்கு வரும் எரர் மெசேஜில் என்ன இருக்கிறது என்பதை படித்துப்பாருங்கள் . முடிந்தால் ஒரு பேப்பரில் அதை நோட் செய்துகொண்டு அதை அப்படியே கூகுளிட்டு தேடுங்கள் .

நம்முடைய ரேம் ஒரு விதத்தில் நாம் ஒரு காலத்தில் படித்த பைனரி முறையில் வேலை செய்கிறது எனலாம் .அதாவது 256 MB ரேமில் அதற்க்குத்தகுந்த மெமரி மாட்யூல்கள் இருக்கும் . ஒவ்வொரு மாட்யூலிலும் தகவல்கள் துளித்துளியாக சேகரிக்கப்படும் , ஒவ்வொரு தகவலுக்கும் ஒரு அட்ரஸ் இருக்கும் . அந்த அட்ரஸ் தான் மேற்கண்டஎரர் கோடில் இருக்கும் 0x has occurred at xxxx:xxxxxxx”எனும் வரியில் வரும் எண்கள் .

பெரும்பாலும் இவை ஹெக்ஸாடெசிமல் கோடில் இருக்கும் . அதாவது அந்த அட்ரஸில் உள்ள தகவலை தன்னால் மீட்க முடியவில்லைஎன்று கணினி அறிவிக்கும் தகவல்தான் அந்த எரர் மெசேஜ் .

காரணங்கள்

ரேம் பழுதாவதற்க்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன . அதில் முதன்மையானது வோல்டேஜ் ஸ்திரமில்லாமல் இருப்பது (voltage fluctuation) , யூபிஎஸ்  சரியில்லாமல் இருப்பது எஸஎம்பஎஸ் தேவைக்கு அதிகமாக பவர் சப்ளை செய்வது போன்றவை முக்கிய காரணிகள் . ஆகவே முடிந்த வரை பவர் பிளக்ட்சுவேசனில் இருந்து கணிணியை காக்க முயலுங்கள் .

சோதனை முறைகள்

இந்த வகை எரர் மெசேஜுகளை நீங்கள் அடிக்கடி எதிர்கொள்ள நேரிட்டால் முதலில் உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மீண்டும் நிறுவிப்பாருங்கள் . மீண்டும் இது தொல்லை கொடுத்தால் கீழ்கண்டவற்றுல் எதையாவது ஒன்றை இணையத்தில் இருந்து பதிவிறக்கி உபயோகித்துபாருங்கள் .

 1. மெம்டெஸ்ட் .

இது வல்லுனர்களால் முதலிடத்திற்க்கு பரிந்துரைக்கப்படுகிறது .http://www.memtest86.com/#download0 என்ற இணையதளத்தில் இதனை இலவசமாக பதிவிறக்கி ஒரு பிளாப்பியிலோ அல்லது சிடியிலோ அதனை காப்பிசெய்து ,பையாஸில் “பூட் ப்ரம் சிடி/அல்லது பிளாப்பி” தேர்வு செய்யவேண்டும் , பிறகு கணினியை ரீஸ்டார்ட் செய்தால் மெம்டெஸ்ட் அப்ளிகேஷன் ரன்னாக ஆரம்பிக்கும் .

பெரும்பாலும் இது பிரச்சனையை கண்டுபிடித்தால் உடனடியாக சொல்லிவிடும் ,எதற்க்கும் ஒரு நாள் முழுக்க மெம்டெஸ்டை ரன் செய்வது நல்லதுஎன்று பரிந்துரைக்கப்படுகிறது .

2. விண்டோஸ் மெமரி டையாக்னோஸ்டிக்ஸ் .
இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது . இதனையும் http://oca.microsoft.com/en/windiag.asp என்ற இணையதளத்தில் இதனை இலவசமாக பதிவிறக்கலாம் ,ஒரு பிளாப்பியிலோ அல்லது சிடியிலோ அதனை பதிவு செய்து மேலே குறிப்பிட்டது போல பையாஸில்”பூட் ப்ரம் சிடி/அல்லது பிளாப்பி” தேர்வு செய்து கணினியை ரீஸ்டார்ட் செய்தால் அப்ளிகேஷன் ரன்னாக ஆரம்பிக்கும் . இதனையும் ஒரு நாள் ஓடவிடுவது நல்லது .

இந்த சாப்ட்வேர்கள் ரேம் மெமரியில் எந்தெந்த மாட்யூல்கள் சரியாக வேலை செய்யவில்லைஎன்பதை ரிப்போர்ட் செய்யும் . ஒருவேளைஎந்த ரிப்போர்ட்டும் வரவில்லைஎன்றால் நீங்கள் நிம்மதிப்பெருமூச்சு விடலாம் , உங்கள் ரேமில் பிரச்சனை இல்லை . ஆனால் சில மாட்யூல்களில் பிரச்சனை என்று வந்தால் நிச்சயம் ரேம் பழுதடந்துவிட்டதுஎன்று பொருள் . ஒருவேளை ரேமின் எல்லா மாட்யூலிலும் பிரச்சனை என்று வந்தால் பிரச்சனை உங்கள் ரேமில் இல்லை , மாறாக ரேமினை மதர்போர்டில் சொருகும் ஸ்லாட்டில் பிரச்சனை எனக்கொள்ளலாம் . அப்படி இருந்தால் ரேமினை ஸ்லாட் மாற்றி சொருகிப்பாருங்கள் , ஒருவேளை ஒழுங்காக வேலை செய்ய வாய்ப்பிருக்கிறது .

ஆனால் ஒன்று நிச்சயம் , ரேமில் பிரச்சனை என்றால் , அதை சரிசெய்ய இயலாது . ரேமை மாற்றுவதுதான் ஒரே வழி . அதேபோல மதர்போர்டு ஸ்லாட்டில் பிரச்சனைஎன்றாலும் அதனை சரிசெய்வது குதிரைக்கொம்புதான் .

குறிப்பு: மேற்கண்ட தகவல்கள் கடந்த இரண்டு மாதங்களாக நான் அனுபவித்த பிரச்சனைகளுக்கும் , தீர்வு தேடி அலைந்த இணைய பக்கங்களிலும் கண்டவை . கணிப்பொறியியலில் வல்லமை பொருந்திய வலைப்பதிவர்கள் யாரேனும் இதில் குற்றம் கண்டால் தயை கூர்ந்து தெரிவியுங்கள் , திருத்திக்கொள்கிறேன் . வணக்கம் .

பெர்பார்மென்சிங் – பிளாக்கர் விசிட்டர் என்னிக்கை அறிய .

வணக்கம் நண்பர்களே ,
வேர்டு பிரஸ் தளத்தில் பிளாக் வைத்திருப்பவர்களுக்கு அவர்களே விசிட்டர்கள் என்னிக்கை அறிய டேஷ்போர்டில் வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள் . நாம் இப்போது பார்க்கப்போவது பிளாக்கர்.காம் யூசர்களுக்காக .

பயர்பாக்ஸ் பிரவுசர் பயனாளர்கள் , பயர்பாக்ஸ் வெப்சைட்டில் பல வகையான புரோக்ராம்களை பெற்று பிரவுசருடன் இனைத்துக்கொள்ள முடியும் . இந்த சின்ன புரோக்ராம்களை அங்கே எக்ஸ்டென்ஷன் என்று அழைக்கிறார்கள் .

உண்மையில் புரோக்ராம் போடத்தெரிந்த யார் வேண்டுமென்றாலும் தங்களுக்கே தங்களுக்கென்று ஒரு எக்ஸ்டென்ஷனை உருவாக்கிக்கொள்ள முடியும் .

இங்கே கிளிக்கினால் பயர்பாக்ஸ்எக்ஸ்டென்ஷன் டவுன்லோட் சைட்டிற்க்கு செல்ல முடியும் .

இப்படியாக நான் அதில் உலாத்திக்கொண்டிருந்த போது பார்த்ததுதான் பெர்பார்மென்சிங் .

பெர்பார்மென்சிங் என்பது ஒரு பிரவுசருடன் ஒன்றினைக்கப்பட்ட பிளாக் போஸ்டிங் எடிட்டர் . அதாவது , நீங்கள் உங்கள் பிளாக்கில் போஸ்ட் செய்ய வேண்டிய கன்டென்ட்டுகளை பிளாக்கர் . காம் வெப்சைட்டில் ஆன்லைனில்தான் டைப் செய்ய வேண்டும்என்பதில்லை . இந்த டூல் நீங்கள் டைப் செய்ய நோட்பேட் போன்ற ஒருஎடிட்டரை கொடுத்துவிடும் . அதில் டைப் செய்து , பிளாக்கர் வெப்சைட்டிர்க்கு செல்லாமலே நம்முடைய கன்டென்டை போஸ்ட் செய்ய முடியும் .
அதாவது ஒவ்வொரு முறையும் சைட் அட்ரஸ் அடித்து -> சைன் இன் செய்து => கிரியேட் நியூ போஸ்ட் -> டைப் -> பப்ளிஷ்என்று செய்ய தேவையில்லை . மாறாக இதில் டைப் செய்து பப்ளிஷ் கொடுத்தால் நம் பிளாகில் பப்ளிஷ் ஆகிவிடும் . அதற்கு கொஞ்சம் இதை கான்பிகர் செய்து வைத்தால் போதுமானது .

பெர்பார்மென்சிங் பெற இங்கே கிளிக்கவும்

இந்தஎக்ஸ்டென்ஷன் பயர்பாக்ஸ் பிரவுசருக்குள் கீழ் ரைட் ( வலதா / இடதா ??) மூலையில் ஒரு நோட்பேட் ஐகான் ஒன்றை உருவாக்கும் . அந்த ஐகானை கிளிக் செய்தால் ஒரு சின்ன நோட்பேட் போன்றஎடிட்டர் பிரவுசருக்குள் திறக்கும் . அதில் ரைட் சைடில் பிளாக்ஸ்என்ற பெட்டிக்கு கீழே இருக்கும் “ஆட்” பட்டனை கிளிக் செய்தால் , நமது பிளாக்கின் முகவரியை கேட்கும் . அதன் வழிமுறைகளை பின் தொடர்ந்தால் நமது பிளாக் பெர்பார்மென்சிங்கிற்காக கான்பிகர் ஆகிவிடும் .

இதில் பிளாக்கர்.காம் பயனர் ஸ்பெஷல் என்பது மெட்ரிக்ஸ்என்ற வசதி . பெர்பார்மென்ஷிங் வெப்சைட்டில் நீங்கள் இதற்க்கு தனியாக ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும் . அதில் கூறியுள்ள நிரல் கோடிங்கை உங்கள் லே அவுட் கோடிங்குடன் இனைத்தால் , மெட்ரிக்ஸ் உங்கள் தளத்துடன் இனைந்து விடும் . இது பின்னனியில் இயங்கி உங்கள் பிளாகிற்கு வருகை தரும் ஆசாமிகளின் தேசம் , கணினிச் சூழல் , தேதி போன்றவற்றை கவனித்து பதிவு செய்ய ஆரம்பித்துவிடும் . பின்னர் நீங்கள் மெட்ரிக்ஸில் ரெஜிஸ்டர் செய்த ஐடியில் சைன் இன் செய்து இந்த தகவல்களை பார்க்கமுடியும் .

மெட்ரிக்ஸ் தம்ப் நெய்ல்
விஸிட்டர்கள் எதை கிளிக் செய்ததன் வழியாக வந்தார்கள் என்ற ரெபரர் தகவல்களை கூட பார்க்க முடியும் .

ஆனால் வேர்டு பிரஸ் பிளாகில் இதை கான்பிகர் செய்ய முயன்ற போது தோல்விதான் கிட்டியது . அதனால்என்ன , நமக்கு இவர்கள் அந்த வசதியை டீபால்டாகவே கொடுத்திருக்கிறார்களே .

powered by performancing firefox

மரித்த நீலத்திரை – இரண்டாம் பாகம் [ நிறைவு ]

இந்த பதிவு முதற் பாகத்தின் தொடர்ச்சி ஆகும் .

நாம் கடைசி பதிவில் பார்த்தது , நம் கணிப்பொறியை தற்காலிகமாக ஒரு இயக்க நிலைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கும் .
ஆனால் அதில் நாம் இன்ஸ்டால் செய்த சாப்ட்வேர்கள் , செட்டிங்குகள் போன்றவற்றை கான இயலாது . அதை மீட்கும் முயற்சியைதான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம் .

நாம் இதில் நம்முடைய சிஸ்டத்தை இதற்கு முந்தைய நிலைக்கு ரீஸ்டோர் செய்யப்போகிறோம் .
நாம் எல்லோருமே ‘மைக்ரோஸாப்ட் சிஸ்டம் ரீஸ்டோர் ‘ யுட்டிலிட்டியை உபயோகிப்பதில்லை . துரதிருஸ்ட வசமாக ,அந்த யுட்டிலிட்டியில் நாமாக போய் ரீஸ்டோர் பாயின்டை செட் செய்திருக்க வேண்டும் .இல்லையெனில் அதை உபயோகிப்பதில் பயனில்லை .
ஆனால் அது நமக்கு தெரியாமல் நாம் சிஸ்டத்தை ஸ்டார்ட் செய்யும் பொழுதெல்லாம் செட்டிங்குகளை பேக்கப் எடுத்து வைத்துக்கொண்டிருக்கும் .என்ன .. அந்த செட்டிங்குகள் இருக்கும் பைல்களை தான் இப்பொழுது நாம் நோண்டப்போகிறோம் .

முதலில் அந்த பைல்களை அனுகுவதுஎப்படிஎன்று பார்ப்போம் .

1) வின்டோஸ்எக்ஸ்புளோரரை ஸ்டார்ட் செய்துகொள்ளுங்கள்
2) டூல்ஸ் -> போல்டர் ஆப்ஷன்ஸ் தேர்வு செய்யுங்கள் .
3) வியூ டேபை தேர்வு செய்யுங்கள்
4) ஹிடன் பைல்ஸ் அன்ட் போல்டர்ஸ் க்கு கீழே “Show hidden files and folders ” தேர்வு செய்யவும் ( செக் பாக்ஸில் டிக் செய்யவும் )

5) அதிலேயே கீழே “Hide protected operating system files (Recommended)” செக் பாக்ஸில் உள்ள செக் மார்க்கை எடுக்கவும் [ டீ செலக்ட் ]
6) இப்போது தோன்றும் டயலாக் பாக்ஸில் “யெஸ்” சொல்லுங்கள் .
7) நீங்கள் வின்டோசை இன்ஸ்டால் செய்திருக்கும் டிரைவுக்குள் செல்லுங்கள் .

இங்கே தான் அந்த அதிக பாதுகாப்புடன் மறைக்கப்பட்ட பேக்கப்புகள் உள்ள ‘system volume information’ போல்டர் மங்கலாக தெரியும் .

நீங்கள் பேட் 32 டிரைவ் வைத்திருந்தீர்களென்றால் அந்த போல்டரை டபுள் கிளிக் செய்தால் உள்ளே போய்விடும் ,” என் டி எப் எஸ் ” டிரைவ் வைத்திருப்பவர்களை உள்ளே வின்டோஸ் உள்ளே விடாது [ ” என் டி எப் எஸ் ” இன் உருப்படியான பயன்களில் இதுவும் ஒன்று ] .
ஆகவே அந்த பொல்டரை ரைட் கிளிக் செய்து “ஷேரிங் அன்ட் செக்யூரிட்டி” தேர்வு செய்து பின்னர் செக்யூரிட்டி டேபை தேர்வு செய்யுங்கள் .

செக்யூரிட்டி டேப் அங்கே இல்லைஎன்பவர்கள் பின் வரும் வழிகளை பின்பற்றவும்
1) டூல்ஸ் – > போல்டர் ஆப்ஷன்ஸ் -> வியூ [டேப் ] கொடுக்கவும்
2) அதில் உள்ள மெனுவில் கடைசி வரை ஸ்க்ரோல் செய்தால் கடைசியில் “யூஸ் சிம்பிள் பைல் ஷேரிங் அன்ட் செக்யூரிட்டி “என்றொரு ஐட்டம் செக்காகி இருக்கும் , அதை அன்செக் செய்யுங்கள் , வரும் வார்னிங்கை ஓகே சொல்லுங்கள் .

இப்பொழுது செக்யூரிட்டி டேபில் “ADD” என்றிருக்கும் பட்டனி கிளிக் செய்து அதில் “Enter the object names to select “என்றிருக்கும் பாக்ஸில் உங்கள் யூசர் நேமை [கவனம் தேவை] டைப் செய்யவும் .
இப்போது அநேகமாக அந்த போல்டர் உங்களுக்கு திறக்கப்பட்டிருக்கும் .எல்லா பாக்ஸிற்க்கும் ஓகே கொடுத்து எக்ஸ்புளோரரில் அந்த போல்டரை திறக்கவும் .

முதலில் டிச்பிளே செட்டிங்கை டீடெய்ல்ட் வியூவிற்க்கு மாற்றிக்கொள்ளுங்கள் . அதில் தெரியப்போகும் டைம் ஸ்டாம்புகள் நமக்கு தேவை .

இங்கே ““_restore{87BD3667-3246-476B-923F-F86E30B3E7F8}” போன்ற பெயர்களில் பல போல்டர்கள் இருக்கும் .
அதில் தற்போதைய நேரத்தில் உருவாகியுள்ளாத ஒரு போல்டரை திறக்கவும் .
இந்த சப் போல்டரில்
“RP ***”என்ற பெயரில் பல போல்டர்கள் இருக்கும் . “RP”என்பது ரீஸ்டோர் பாயின்டை குறிக்கும் .
இதிலும்
தற்போதைய நேரத்தில் உருவாகியுள்ளாத ஒரு போல்டரை திறக்கவும் .
அதற்க்குள் மேலும் ஸ்நாப்ஷாட் சப் போல்டர்களை திறக்கவும் .

உதாரணத்திற்க்கு : C:\System Volume Information\_restore{D86480E3-73EF-47BC-A0EB-A81BE6EE3ED8}RP1Snapshot

அதிலிருந்து கீழ் கண்ட பைல்களை , நாம் முதல் பதிவில் பார்த்த டெம்பிரரி போல்டருக்கு காபி செய்யவும் .
_registry_user_.default
_registry_machine_security
_registry_machine_software
_registry_machine_system
_registry_machine_sam

இப்போது கணினியை ரீஸ்டார்ட் செய்யவும் . [ சிடி இன்னும் உள்ளேதான் இருக்கிறதுஎன்று உறுதி படுத்திக்கொள்ளவும் ]

ரெக்கவரி கண்சோலுக்குள் நுழையுங்கள் . முதற் பதிவில் சொன்னபடி கமான்ட் பிராம்ப்ட் வரை செல்லுங்கள் .

இப்போது கீழ்கண்ட கமான்டுகளை டைப் செய்யுங்கள் .
Del c:\windows\system32\config\sam

Del c:\windows\system32\config\security

Del c:\windows\system32\config\software

Del c:\windows\system32\config\default

Del c:\windows\system32\config\system

copy c:\windows\tmp\_registry_machine_software c:\windows\system32\config\software

copy c:\windows\tmp\_registry_machine_system c:\windows\system32\config\system

copy c:\windows\tmp\_registry_machine_sam c:\windows\system32\config\sam

copy c:\windows\tmp\_registry_machine_security c:\windows\system32\config\security

copy c:\windows\tmp\_registry_user_.default c:\windows\system32\config\default

[ முதல் பதிவு , டிரைவ் லெட்டர் முக்கியம் நண்பரே , கூடவே சின்டாக்ஸும் ]

இப்போது “exit” என்று டைப் செய்து , சிடியை வெளியில் எடுத்து விட்டு ,ரீஸ்டார்ட் செய்தால் கணிப்பொறி பழைய நிலைக்கு ரீஸ்டோர் ஆகியிருக்கும் .

அவ்ளோதான்

இந்த கொடுமையான தமிழாக்கம் புரியாதவர்கள் , ஒரிஜினல் பதிப்பை இங்கே , இங்கே அப்புறம் இங்கே சென்று படித்துக்கொள்ளுங்கள் .

powered by performancing firefox

மரித்த நீலத்திரை – எக்ஸ்பி – சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று

வணக்கம் நண்பர்களே .
     விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திரை’ என்று தமிழ்ப் படுத்தலாம் .
இந்த கட்டுரை , மரித்த நீலத்திரையில் சில வகை வாசகங்கள் தோன்றினால் , அந்த எரர்களை சரி செய்யும் வழிமுறைகளை பற்றியது .

முதலில் உங்களிடம் எக்ஸ்பி சிடி இருக்க வேண்டும் . இந்த கட்டுரை , உங்கள் டிரைவுகள் ‘என் டி எப் எஸ்’ ரக பார்மேட்டை கொண்டிருக்கும் என்ற தோரனையில் எழுதப்பட்டது . உங்களுடையது பேட் 32 ரகமாக இருப்பின் , சில வழிமுறைகள் மிச்சமாகும்.

முதலில் உங்கள் எரர் கீழ்கண்ட சொற்களை உடையதாக இருப்பின் , இந்த வழிமுறை கண்டிப்பாக வேலை செய்யும் . ஒரு வேலை எரர் மெஸேஜை படிக்க முடியாமல் வேகமாக ரீஸ்டார்ட் ஆனாலும் நீங்கள் இவ்வழிமுறையை முயற்சித்து பார்க்கலாம் .

Windows XP could not start because the following file is
missing or corrupt: \WINDOWS\SYSTEM32\CONFIG\SYSTEM


Windows XP could not start because the following file is missing
or corrupt: \WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE


Stop: c0000218 {Registry File Failure} The registry cannot load the hive
(file): \SystemRoot\System32\Config\SOFTWARE or its log or alternate

System error: Lsass.exe
When trying to update a password the
return status indicates that the value provided as the current password is not
correct.

இவைதானென்றில்லை , மேலும் சில வகை ரெஜிஸ்ட்ரி எரர்களுக்கும் இந்த முயற்சியை மேற்கொள்லலாம் . இனி ஆப்பரேசனுக்கு தயாராகுங்கள் .

முதற் பகுதி

 ரெக்கவரி கன்சோலுக்குள் செல்வது

   அதற்கு முதலில்

 •     கணினியை ரீஸ்டார்ட் செய்யுங்கள் . செய்யும்போது டெலீட் கீயை தட்டிக்கொண்டே இருங்கள் .
 •     இப்போது பையாஸ் மெனு வரும் . அதில் பூட் ஆப்சன்ஸ் சென்று பூட் டிவைஸ் பிரையாரிட்டியை முதலில் சிடியில் இருந்து பூட் செய்யுமாறு மாற்றி அமையுங்கள் .
 •     உங்கள் எக்ஸ்பி சிடியை சொருகி ரீஸ்டார்ட் செய்யுங்கள்
 •     உங்கள் “press any key to boot from cd …. ” என்று திரையில் வாசகம் தெரியும் . அப்போது ஏதாவது ஒரு கீயை தட்டி சிடியில் இருந்து பூட் செய்ய சொல்லுங்கள்
 •     கொஞ்ச நேரம் டிவைஸ் டிரைவர்கள் எல்லாம் லோட் ஆகும் .
 •     பிறகு உங்களிடம் புதிதாக விண்டோஸ் இன்ஸ்டால் செய்யவா அல்லது ரிப்பேர் செய்யவா என்று கேட்கும் . ‘ஆர்’ பட்டனை அழுத்தி ரிப்பேர் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும் .


நீங்கள் அனேகமாக ரெக்கவரி கண்சோலுக்குள் நுழைந்து விடுவீர்கள் .

பின்னர் உங்களின் எந்த இன்ஸ்டாலேசனை சரி செய்ய வேண்டுமோ அதற்குள் நுழையுங்கள் . பாஸ்வேர்டு கேட்கும் , கொடுங்கள் . பெரும்பாலான கணினிகளில் இது பிளாங்க் ஆக இருக்கும் .

பிறகு கீழ்கண்ட கமாண்டுகளை தேவையான ஸ்பேஸ் விட்டு , உள்ளது உள்ளபடி ,
தட்டுங்கள் . இதில் C:\ கோலன் என்பது உங்கள் இயங்குதளத்தின் ரூட் பாத் . அதாவெது நீங்கள் ‘ஐ’ டிரைவில் விண்டோசை நிறுவியிருந்தால் “c:\” பதில் “I:\” என்று மாற்றிதட்ட வேண்டும் .

md tmp

copy C:\windows\system32\config\system C:\windows\tmp\system.bak

copy C:\windows\system32\config\software C:\windows\tmp\software.bak

copy C:\windows\system32\config\sam C:\windows\tmp\sam.bak

copy C:\windows\system32\config\security C:\windows\tmp\security.bak

copy C:\windows\system32\config\default C:\windows\tmp\default.bak

delete C:\windows\system32\config\system

delete C:\windows\system32\config\software

delete C:\windows\system32\config\Sam

delete C:\windows\system32\config\security

delete C:\windows\system32\config\default

copy C:\windows\repair\system C:\windows\system32\config\system

copy C:\windows\repair\software C:\windows\system32\config\software

copy C:\windows\repair\sam C:\windows\system32\config\sam

copy C:\windows\repair\security C:\windows\system32\config\security

copy C:\windows\repair\default C:\windows\system32\config\default

ஒவ்வொரு வரியை டைப் செய்தவுடன் என்டர் கீயை தட்டவும் . இதில் எல்லா ‘காப்பி’ கமாண்டுகளும் “பைல் காப்பீட்” என்ற மெஸேஜை வெற்றிகரமாக எக்சிக்யூட் ஆனவுடன் தரும் . “டெலீட்” கமாண்டுகள் எந்த அடையாளமும் காட்டாமல் அடுத்த பிராம்ப்டுக்கு சென்றுவிடும் .

இப்போது

EXIT
என்று அடியுங்கள் . இது சிஸ்டத்தை ரீஸ்டார்ட் செய்யும் . உங்கள் சிடியை வெளியில் எடுக்க வேண்டாம் , பிறகு அதில் வேலையி்ருக்கிறது .

சிஸ்டம் ரீஸ்டார்ட் ஆகும்போது மீண்டும் உங்களிடம் “பிரஸ் எனி கீ ” என்று கேட்கும் , எதையும் அழுத்தாமல் வேடிக்கை மட்டும் பாருங்கள் . உங்கள் சிஸ்டம் தற்பொழுது  பூட் ஆகி GUI  வரை செல்ல வேண்டும் . அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் யாராவது அனுபவசாலியை பக்கத்தில் வைத்து சரிசெய்யவும் , அல்லது சர்வீஸ் சென்டரை கூப்பிடவும்.

பகுதி இரண்டு எழுத கொஞ்சம் போரடிக்கிறது நண்பர்களே , கொஞ்ச நேரம் கழித்து அதை எழுதுகிறேன் . சரியா . தற்போதைக்கு உங்கள் கணினி வேலை செய்யும் நிலையை எட்டி யிருக்கும் . ஆனால் முழுமையாக இன்னும் உங்கள் பழைய செட்டிங்குகள் , சாப்ட்வேர்களை ரீஸ்டோர் செய்வதை அடுத்த பதிவில் காண்போம் .
அடுத்த பதிவு வரும் வரை பொறுமை யில்லாதவர்கள்  கீழ்கண்ட ஆங்கில பக்கங்களை தயவு செய்து முழுவதுமாக படித்துவிட்டு வேலையை ஆரம்பிக்கவும் . இல்லையன்றால் பாதியில் மாட்டிக்கொள்ள நேரிடும் .

http://proccy.blogspot.com/2006/10/dealing-blue-screens-deal-that-they.html

http://support.microsoft.com/kb/307545

.

இரண்டாம் பாகத்தில் சந்திப்போம் .

powered by performancing firefox

விண்டோஸ் எக்ஸ்புளோரருக்கு மாற்று மென்பொருட்கள்

சற்று நேரம் முன்பு delicious’ல் மேய்ந்து கொண்டிருந்த போது இந்த பக்கம் கண்ணில் பட்டது .நமக்கு விண்டோஸ் எக்ஸ்புளோரர் போரடித்து போனால் உபயோகிக்க மாற்று பைல் பிரவுஸர்க்களின் பட்டியலை அளித்திருக்கிறார்கள் ..

இதில் முதலில் இலவச சாப்ட்வேர்களை பற்றி மட்டும் பார்ப்போம் .

A43 :
வலைத்தளம் செல்ல இங்கே கிளிக்கவும்

உபயோகிக்க கொஞ்சம் ரேம் மெமரி எடுத்துக்கொண்டாலும் , வேகமான ரெஸ்பான்ஸ் டைம் உண்டு . முக்கியமாக இதை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை . ஒரு லொக்கல் *.INI பைலில் இதன் செட்ட்டிங்க்குகள் சேமித்து வைக்க ப்பட்டிருக்கும் . ஆகவேஎ பென் டிரைவ் , அல்லது பிளாப்பி டிரைவில் அடக்கி வைத்து எந்த கணி்னியிலும் உபயோகிக்க முடியும் . அதிகமாக ஜிப் , ரேர் ஆகிய கம்பிரஸன் சாப்ட்வேர் உபயோகிப்பவர்களுக்கு மிகவும் வசதி்யானது .

கியூபிக் எக்ஸ்புளோரர்

பெறுவதற்கு சொடுக்கவும்

கிட்டத்தட்ட ACDsee போன்ற இன்டெர்பேஸுடன் இருக்கும் இதில் புக்மார்க்குகள் , தம்ப் நெயில்கள் மற்றூம் ஒரு டெக்ஸ்ட்எடிட்டர் போன்ற வசதிகள் உள்ளன

எக்ஸ்புளோரர் எக்ஸ்பி

பதிவிறக்க

பல பைல்களை ஒரே நேரத்தில் பெயர் மாற்றும் வசதி உண்டு . டவுன்லோட் சைஸ் 410 கே பி மட்டுமே .எக்ஸ்புளோரர் பிரியர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் .

பிரீ கமான்டர்

பெற்றுக்கொள்ள

சிஸ்டம் போல்டர்களை எளிதாக அனுக முடியும் . MD5 செக்சம்களை உருவாக்கவும் சரிபார்க்கவும் வசதிகள் உண்டு . டாஸ் கமாண்ட் பிராம்ப்ட் ஒருங்கினைக்கப்பட்டுள்ளது .

எக்ஸ் ப்ளோரர்

பதிவு + இறக்கம்

மிக வேகமான மென்பொருள் . சிறிய சைஸ் . பிளாப்பி , யூஎஸ் பி டிரைவ்களில் இருந்து இயக்க முடியும் . வின்டோஸ்எக்ஸ்புலோரரை விட பல மடங்கு மேம்பட்டதாக இருக்கிறது .

இன்னும் பல இருக்கின்றன . முழு ரெவ்யூவிற்கு கீழ்கண்ட லிங்கை தொடரவும் .

http://www.simplehelp.net/2006/10/11/10-windows-explorer-alternatives-compared-and-reviewed/#cubic

powered by performancing firefox