ஆஃப் லைன் வலைபதிவு எடிட்டர்கள்

       எப்பவாச்சும்தான் நெட் கனெக்சன் கிடைக்கும் , ஆனா கிடைக்கற கொஞ்ச நேரத்துல உக்காந்து வலைபதிவ டைப் பன்னி நெட் டையத்த வீணடிக்க விருப்பமில்லாதவர்களுக்கும் , வீக் வை-ஃபை சிக்னலும் லேப்டாப்புமா வலைபதிய மல்லுக்கட்றவங்களுக்கும் ரொம்ப லேட்டா ஒரு அப்டேட் . ‘ஆஃப் லைன் வலைபதிவு எடிட்டர்கள்’ அப்டின்னு ஒரு கொத்து சாப்ட்வேர்க இருக்கு நெட்ல . அதுல ஆப்லைன்ல டைப்பி முடிச்சுட்டு . நெட் கிடைக்கற நேரத்துல நம்ம பிளாகுக்கு எல்லாத்தையும் சின்க்/ப்திவேத்திக்க பன்னிக்க முடியும் .

    ரொம்ப காலம் முன்னாடி performancing firefoxன்னு ஒரு எக்ஸ்டன்ஷன் இருந்தது . அப்புறமா அது பேர scribe fireன்னு மாத்தி ரொம்ப அட்டகாசமா அப்டேட் பன்னிட்டாங்க . நாந்தான் அத பத்தி எழுதுன பழைய போஸ்ட்டயும் ( ஏன் இந்த பிளாகயும் கூட ) அப்டேட் பன்னாமயே சுத்திட்டிருந்தேன் . இப்ப அதுல எதுனா அட்வாண்சாயிருக்கான்னு எட்டிபாத்தப்ப நம்ம மைக்ரோசாப்ட் களத்துல குதிச்சிருக்கறது தெரிய வந்தது . "விண்டோஸ் லைவ் ரைட்டர்"ன்னு பேரு . நல்லாதான் இருக்குது . பெர்பார்மன்சிங்/ ஸ்கிரைப் பயர் ரெண்டுலயும் தமிழ்ல டைப் பன்னா எழுத்து ரெண்டரிங் பிரச்சனை இருக்கும் , ‘தி’ அடிச்சா ‘த’ அப்புறம் கொம்பு தனியா வரும் . அந்த கடுப்பு இப்ப லைவ் ரைட்டர்ல இல்ல .   இதுலயே படம் வீடியோ டேபிள் எல்லாத்தயும் டிசைன் பன்னிட்டு அப்புறம் மொத்தமா அப்லோட் பன்ற வசதில்லாம் இருக்கு .

இதுவரை கண்டுபுடிச்ச சாப்ட்வேர் லிஸ்டு இதுதான் .

Microsoft Windows Live Writer (Windows) – Price: Free – ந்ல்லாருக்கு

Blogger for Word – பிளாகர்.காம் அதிகாரபூர்வ பிளக்-இன்

Qumana Blog Editor (Windows/Mac OS X) – Price: Free – இன்னும் டிரை பன்னல

Post2Blog (Windows) – Price: Free ‘ ‘

BlogDesk (Windows) -Price: Free -  ‘ பிளாகர் டிசைன் டெம்பிளேட்ச கெடுத்துரும்ன்னு கேள்வி ‘

ScribeFire (Firefox Extension) – Price: Free – தமிழ்ல டைப் பன்றதுன்னா பிரச்சனை , ஆனா பயர்பாக்ஸ் பிளக்கின் இது , தனியா இன்ஸ்டால் பன்ன தேவையில்ல

w.bloggar (Windows) – Price: Free – ஏகப்பட்ட சர்வீச சப்போர்ட் பன்னும் .

இதுல w.bloggar , BlogDesk , Live Writter  இதுக்கெல்லாம் நல்ல ரசிகர் பட்டாளம் இருக்கு , லினக்ஸுக்கு தான் ஸ்கிரைப் பயர விட்டா வேற கதி இல்ல போலிருக்கு . மேக்கின்டோஷுக்கு ECTO , Journier ன்னு சில நல்ல எடிட்டர் இருக்கு . FLOCK ங்கற ஒரு பயர்பாக்ஸ் மாதிரி பிரவுசருக்குள்ள ஒரு இன்-பில்ட் பிளாக் எடிட்டர் இருக்கு .

இன்னும் பைசா போட்டு வாங்கவேண்டிய சாப்ட்வேர்க சில / ஷேர்வேர் கொஞ்சம் எல்லாம் இருக்கு , அதெல்லாம் லிஸ்ட்ல சேத்துக்கவே இல்ல 🙂 .

வலைபடிப்பாளர் சமுதாயம் இத்த கண்டுகினு பயன்பெறட்டும்னு பணிவா கேட்டுக்கிறேன் . 🙂

Advertisements
தமிழ் இல் பதிவிடப்பட்டது . 4 Comments »

4 பதில்கள் to “ஆஃப் லைன் வலைபதிவு எடிட்டர்கள்”

 1. aruna Says:

  wow..that’s a great news….thanx
  anbudan aruna

 2. ஜுர்கேன் க்ருகேர் Says:

  ரொம்ப நன்றி

 3. karthikeyan Says:

  புதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: