ரேம் பிரச்சனைகள் :

Fatal Exception 0x has occurred at xxxx:xxxxxxx

வீட்டுக் கணினி பயனாளர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளுள் ஒன்று கீழ்கண்ட “எரர் மெசேஜ்” , ஒரு நீலத்திரையில் “Fatal Exception 0x has occurred at xxxx:xxxxxxx“எனற வகையில் சில ஹெக்ஸாடெசிமல் எண்கள் குறிப்பிடப்பட்டு நாம்
செய்து கொண்டுள்ள வேலையை கெடுத்து ,எங்கே பிரச்சனை , ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலா அல்லது வேறெங்குமா என்று குழம்ப வைக்கும் .

மேற்கண்ட வகையறா எரர் மெசேஜ் , விண்டோஸ் வகை ஆப்பரேட்டிங் சிஸ்டம் வைத்திருப்பவர்களுக்கு , லினக்ஸ் பயனாளர்கள் கெர்னல் லோட் ஆகும்போது இதே போல சில அட்ரஸ் ரேஞ்சுகளை உற்றுக்கவணித்தால் பார்க்கலாம் , சில நேரங்களில் “கெர்னல் பேனிக்”எரர் மெசேஜும் கிடைக்கும் .
சரி இப்போது இந்த வகை எரர் மெசேஜுகள் எதனால் வருகின்றன என்று பார்ப்போம் .
கள்வர் காம்போனென்ட்

இந்த வகை எரர் கோடுகள் பெரும்பாலும் ரேம் பழதடைந்தாலோ அல்லது ரேமிலுள்ள தகவலை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தால் திரும்ப பெற முடியாமல் போனாலோ கிடைக்கும் .

அல்லது பிரச்சனை உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டாலேசன் சம்பந்தமாக இருக்கலாம் .
முதலில் உங்களுக்கு வரும் எரர் மெசேஜில் என்ன இருக்கிறது என்பதை படித்துப்பாருங்கள் . முடிந்தால் ஒரு பேப்பரில் அதை நோட் செய்துகொண்டு அதை அப்படியே கூகுளிட்டு தேடுங்கள் .

நம்முடைய ரேம் ஒரு விதத்தில் நாம் ஒரு காலத்தில் படித்த பைனரி முறையில் வேலை செய்கிறது எனலாம் .அதாவது 256 MB ரேமில் அதற்க்குத்தகுந்த மெமரி மாட்யூல்கள் இருக்கும் . ஒவ்வொரு மாட்யூலிலும் தகவல்கள் துளித்துளியாக சேகரிக்கப்படும் , ஒவ்வொரு தகவலுக்கும் ஒரு அட்ரஸ் இருக்கும் . அந்த அட்ரஸ் தான் மேற்கண்டஎரர் கோடில் இருக்கும் 0x has occurred at xxxx:xxxxxxx”எனும் வரியில் வரும் எண்கள் .

பெரும்பாலும் இவை ஹெக்ஸாடெசிமல் கோடில் இருக்கும் . அதாவது அந்த அட்ரஸில் உள்ள தகவலை தன்னால் மீட்க முடியவில்லைஎன்று கணினி அறிவிக்கும் தகவல்தான் அந்த எரர் மெசேஜ் .

காரணங்கள்

ரேம் பழுதாவதற்க்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன . அதில் முதன்மையானது வோல்டேஜ் ஸ்திரமில்லாமல் இருப்பது (voltage fluctuation) , யூபிஎஸ்  சரியில்லாமல் இருப்பது எஸஎம்பஎஸ் தேவைக்கு அதிகமாக பவர் சப்ளை செய்வது போன்றவை முக்கிய காரணிகள் . ஆகவே முடிந்த வரை பவர் பிளக்ட்சுவேசனில் இருந்து கணிணியை காக்க முயலுங்கள் .

சோதனை முறைகள்

இந்த வகை எரர் மெசேஜுகளை நீங்கள் அடிக்கடி எதிர்கொள்ள நேரிட்டால் முதலில் உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மீண்டும் நிறுவிப்பாருங்கள் . மீண்டும் இது தொல்லை கொடுத்தால் கீழ்கண்டவற்றுல் எதையாவது ஒன்றை இணையத்தில் இருந்து பதிவிறக்கி உபயோகித்துபாருங்கள் .

 1. மெம்டெஸ்ட் .

இது வல்லுனர்களால் முதலிடத்திற்க்கு பரிந்துரைக்கப்படுகிறது .http://www.memtest86.com/#download0 என்ற இணையதளத்தில் இதனை இலவசமாக பதிவிறக்கி ஒரு பிளாப்பியிலோ அல்லது சிடியிலோ அதனை காப்பிசெய்து ,பையாஸில் “பூட் ப்ரம் சிடி/அல்லது பிளாப்பி” தேர்வு செய்யவேண்டும் , பிறகு கணினியை ரீஸ்டார்ட் செய்தால் மெம்டெஸ்ட் அப்ளிகேஷன் ரன்னாக ஆரம்பிக்கும் .

பெரும்பாலும் இது பிரச்சனையை கண்டுபிடித்தால் உடனடியாக சொல்லிவிடும் ,எதற்க்கும் ஒரு நாள் முழுக்க மெம்டெஸ்டை ரன் செய்வது நல்லதுஎன்று பரிந்துரைக்கப்படுகிறது .

2. விண்டோஸ் மெமரி டையாக்னோஸ்டிக்ஸ் .
இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது . இதனையும் http://oca.microsoft.com/en/windiag.asp என்ற இணையதளத்தில் இதனை இலவசமாக பதிவிறக்கலாம் ,ஒரு பிளாப்பியிலோ அல்லது சிடியிலோ அதனை பதிவு செய்து மேலே குறிப்பிட்டது போல பையாஸில்”பூட் ப்ரம் சிடி/அல்லது பிளாப்பி” தேர்வு செய்து கணினியை ரீஸ்டார்ட் செய்தால் அப்ளிகேஷன் ரன்னாக ஆரம்பிக்கும் . இதனையும் ஒரு நாள் ஓடவிடுவது நல்லது .

இந்த சாப்ட்வேர்கள் ரேம் மெமரியில் எந்தெந்த மாட்யூல்கள் சரியாக வேலை செய்யவில்லைஎன்பதை ரிப்போர்ட் செய்யும் . ஒருவேளைஎந்த ரிப்போர்ட்டும் வரவில்லைஎன்றால் நீங்கள் நிம்மதிப்பெருமூச்சு விடலாம் , உங்கள் ரேமில் பிரச்சனை இல்லை . ஆனால் சில மாட்யூல்களில் பிரச்சனை என்று வந்தால் நிச்சயம் ரேம் பழுதடந்துவிட்டதுஎன்று பொருள் . ஒருவேளை ரேமின் எல்லா மாட்யூலிலும் பிரச்சனை என்று வந்தால் பிரச்சனை உங்கள் ரேமில் இல்லை , மாறாக ரேமினை மதர்போர்டில் சொருகும் ஸ்லாட்டில் பிரச்சனை எனக்கொள்ளலாம் . அப்படி இருந்தால் ரேமினை ஸ்லாட் மாற்றி சொருகிப்பாருங்கள் , ஒருவேளை ஒழுங்காக வேலை செய்ய வாய்ப்பிருக்கிறது .

ஆனால் ஒன்று நிச்சயம் , ரேமில் பிரச்சனை என்றால் , அதை சரிசெய்ய இயலாது . ரேமை மாற்றுவதுதான் ஒரே வழி . அதேபோல மதர்போர்டு ஸ்லாட்டில் பிரச்சனைஎன்றாலும் அதனை சரிசெய்வது குதிரைக்கொம்புதான் .

குறிப்பு: மேற்கண்ட தகவல்கள் கடந்த இரண்டு மாதங்களாக நான் அனுபவித்த பிரச்சனைகளுக்கும் , தீர்வு தேடி அலைந்த இணைய பக்கங்களிலும் கண்டவை . கணிப்பொறியியலில் வல்லமை பொருந்திய வலைப்பதிவர்கள் யாரேனும் இதில் குற்றம் கண்டால் தயை கூர்ந்து தெரிவியுங்கள் , திருத்திக்கொள்கிறேன் . வணக்கம் .

Advertisements

12 பதில்கள் to “ரேம் பிரச்சனைகள் :”

 1. ennar Says:

  நன்றா உள்ளது நண்பரே

 2. Ramesh Says:

  Actually i have a turboc compiler . am installing this compiler for in my system C: . But am not able to compile my c programs. The earror ” THe find not able find.”

  LIke that am getting error. My frnds says ” I dont know how to solve this problem. But i have idea we are going to set the path for lib function file. ”

  Me and my frnd. We dont have idea where the configration is going to do.

  Please help me

  Regards
  Ramesh

 3. IQBAL Says:

  மிகவும் பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு நன்றி, தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துக்கள்

 4. zodypache Says:

  தங்கள் கட்டுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி

 5. Anand Says:

  மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி

 6. pattali Says:

  அன்பிற்கினிய நண்பருக்கு,
  வணக்கம்.

  உதவி ஒன்று வேண்டியே இந்த மின்னஞ்சல்.
  எனது கணிணியில் சில பிரச்சனைகள்.
  அதை எவ்வாறு நீக்குவது? என்ற உங்கள் ஆலோசனை வேண்டியே இந்த உதவி.

  நான் windows7 பயன்படுத்துகிறேன். திடீரென்று எனது user profile open ஆகவில்லை. “The User Profile Service Failed the logon. User profile cannot be loaded” என்ற செய்தி வருகிறது. .ஆனால், மற்றொரு profile open ஆகிறது. தற்போது அதனைப் பயன்படுத்தித்தான் இந்த மின்னஞ்சலை அனுப்புகிறேன். Administratorரும் logon ஆகியுள்ளது. நான் நிறுவும் போது எந்த வித passwordம் கொடுக்கவில்லை. ஆனால், தற்போது வேறொரு guest profile அமைத்துக் கொள்ளலாம் என்றால் administrator password கேட்கிறது. எவ்வளவு முயன்றும் அதை open செய்ய இயலவில்லை.

  என்ன செய்வது? அருள் கூர்ந்து உதவுங்கள்.
  உங்கள் பதிலை எதிர்நோக்கி ஆவலுடன்…….
  நன்றி.

  தோழமையுள்ள…….
  பாட்டாளி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: