பொது இனையதள முகவரிக்குறிப்புகள் [ சோஷியல் புக்மார்கிங்]

அடிக்கடி இனையத்தில் வெவ்வேறு கணினிகளில் உலா வர வேண்டிய நிலையில் இருக்கும் இனைய குடிதாங்கிகளுக்கு பல பிரச்சனைகள் இருக்கும் . அதில் ஒன்று புக்மார்க்குகள் அல்லது ‘இனைய முகவரிகளை குறித்தல்’ தொடர்பானது .

வழக்கமாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உப்யோகிப்பாளர்கள் “பேவரிட்ஸ்” என்ற மெனுவில் தங்களுக்கு பிடித்தமான வெப் தள முகவரியை குறித்து வைப்பார்கள்(லாம்) .

ஒரே கம்ப்யூட்டரில் புழங்குபவர்களுக்கு அது சரிப்படும் . ஆனால் காடாறு மாதம் நாடாறு மாதம் என்ற விக்கிரமாதித்தன் கதையாக ஆபீசில் 12 மனி நேரம் , வீட்டில் 12 மனி நேரம் இன்டர்நெட்டை முறைப்பவர்கள் , அதிலும் குறிப்பாக அலுவல்கத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணினியில் பொழுதை கழிக்கவேண்டிய நிலையில் இருப்பவர்கள் ,பிரவுசிங் சென்டரில் காலம் கழிப்பவர்கள், புக்மார்க்குகளுக்கு என்ன செய்வது ?. இவர்கள் ஒரு கணினியில் புக்மார்க்கினால் மற்றொரு கணினியில் அதே புக்மார்க்குகள் தெரிய என்ன வழி ?

கொஞ்சம் பிரவுசர் செட்டிங்குகளை நோண்டத்தெரிந்தவர்கள் ” எக்ஸ்போர்ட் புக்மார்க்” என்ற வசதியினை உபயோகித்து ஒருவாறு சமாளிப்பார்கள் .

favourites

ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு கணினிக்கு பிரியா விடை அளிக்கும்போது அந்த செட்டிங்குகளை எக்ஸ்போர்ட் செய்து ,ஈ மெயில் அனுப்பி , மீண்டும் அதை இம்போர்ட் செய்து . . கடைசியில் போரடித்துப்போய் ஒரு வழியாகிவிடுவார்கள் .

இப்போது இந்த தொந்தரவுகளில் இருந்து நம்மை விடுவிக்க சில வசதிகள் இணையத்தில் கிடைக்கின்றன . ” சோஷியல் புக்மார்கிங்” என்று ஆங்கிலத்திலும் , ‘பொது இனையதள முகவரிக்குறிப்புகள்’ என்று கொடுந்தமிழிலும் அவற்றை அழைக்கலாம் .

ஆன்லைனில் கிடைக்கும் இந்த வசதிகள் மூலம் ஒரு இனைய பயனாளர் தமக்கு விருப்பப்பட்ட இனைய முகவரிகளை சேகரித்தல் , சேமித்தல் , மேலான்மை செய்தல் , தேடுதல் ஆகியவை எளிதாகின்றது . எல்லாவற்றிற்க்கும் மேலாக இவற்றை பகிர்ந்தளிப்பது இன்னும் எளிதாகின்றது .

இன்னும் சில வசதிகள் மூலம் யாருக்கு பகிர்ந்தளிக்கிறோம் என்பதை நம்மால் கட்டுப்பாட்டில் வைக்கவும் முடியும் , உதா:- நீங்கள் குறித்துவைத்துள்ள தளங்கள் யாருக்கு எந்த தளம் தெரிய வேண்டும் என்று வரையரைகளை உருவாக்கலாம் .
பெரும்பாலான இத்தகைய வசதிகளை வழங்கும் தளங்கள் தம் பயனாளர்கள் ‘டேக்’ [tag] எனப்படும் ஒற்றை வார்த்தை குறிப்புகளை பயன்படுத்துவதை வரவேற்கின்றன .

tags

இந்த “டேக்”குகள் மூலமாக என்னற்ற புக்மார்க்குகளை தேடும் பனி எளிதாகின்றது. தற்போது சில தளங்கள் இன்னும் ஒருபடி மேலே போய் ஒரு புக்மார்க் லிங்கினை ரேட் செய்யவும் , கருத்துகளை பதிவு செய்யவும் வழிகள் அமைத்து கொடுக்கின்றனர் .

விக்கிபீடியாவில் தோண்டிய வரை 1996ல் itList.com என்ற தளம்தான் முதல் ஆன்லைன் பகிர்ந்தளிக்கும் வசதி கொண்ட புக்மார்க் தளம் என்ற பெருமையை பெறுகிறது . இன்றைய நிலையில் , 2003 இறுதிகளில் நிறுவப்பட்ட டெலீசியஸ் [ http://del.icio.us ] இத்தகைய தளங்களுக்குள் சிறந்ததாக திகழ்கிறது . இது தவிர சிம்ப்ளி[simply] ,பர்ல் [ furl ] , ஸ்டம்பிள் அபான் [stumbleupon] , நெட் வூஸ் [ Netvouz ] , மேக்நோலியா [http://ma.gnolia ] ஆகியன அதை பிந்தொடர்கின்றன .
இன்னும் டிக் [http://digg.com], ரெட்டிட்[http://reddit.com] , நியூஸ்வைன் [http://newswine.com] ஆகிய தளங்கள் இனையத்தில் திரியும் செய்திகளை வேறு ஒரு விதத்தில் புக்மார்க் செய்யும் வசதியை அளிக்கின்றன . ஆனால் இவை பெரும்பாலும் அமெரிக்க மக்களுக்காக உருவாக்கப்பட்டதால் அமெரிக்க செய்திகள்தான் முதன்மை இடங்களை பிடிக்கும் . ( நம்மூர் செய்திகளுக்கு எல்லாம் பிற[others] அல்லது உலகம்[world news] என்ற பிரிவுகளில் கொஞ்சம் இடம் ஒதுக்கு கொடுத்திருப்பார்கள் ) .
மேலும் இப்போதெல்லாம் . பி.பி.சி உட்பட சில செய்தி தளங்களில் செய்திகளின் முடிவில் புக்மார்க் செயவதற்க்கு வசதியாக மேற்சொன்ன சில வெப்சைட்டுகளுக்கு சிறிய லிங்குகளை அளிக்க ஆரம்பித்துவிட்டார்கள்

BBC

சோஷியல் புக்மார்க்கிங்கின் நன்மைகள் என்று சில விஷயங்களை சொல்லலாம் . முதலில் இவற்றை கணிப்பொறி அல்காரிதம்கள் முடிவு செய்வதில்லை, மாறாக அந்த தளத்தினை புரிந்து கொள்ள கூடிய மனிதர்கள் செய்கிறார்கள் . மேற்கொண்டு , கூகுள் போன்ற தளங்கள் எத்தனை லிங்குகள் ஒரு தளத்தினை இணைக்கிறது என்று பார்த்து வரிசைப்படுத்துவது போலல்லாமல் , இத்தளங்கள் எத்தனை பயனாளர்கள் அந்த தளத்தினை புரிந்து கொண்டு “டேக்”குகள் இடுகிறார்கள் என்பதை வைத்து வரிசைப்படுத்தும்போது , கூகுளை விட துல்லியமான தேடல் முடிவுகள் கிடைக்கின்றன .
இவற்றில் இன்னும் சில குறைபாடுகள் இருந்தாலும் , இந்த தொழில்நுட்பம் , மேலும் பன்பட்ட தேடல்களை இணையத்தில் மேற்கொள்வதற்க்கு அடிகோள்கிறது . இனையத்தில் சேகரிக்கப்படும் புக்மார்க்குகள் , மேற்சொன்ன கணினிக்கு கணினி தாவிக்கொண்டிருப்பவர்களுக்கும் , அவர்கள் புக்மார்க்குகளை ஒரே இடத்தில் சேர்த்து வைப்பதிலும் , பயன்படுத்துவதிலும் வசதிகளை எளிமைப்படுத்துகிறது . ஆகவே சக இனைய குடிமகன்களே உடனே டெலீசியசில் ஒரு அக்கவுன்ட் ஆரம்பியுங்கள் . இப்போதெல்லாம் பயர்பாக்ஸ் பிரவுசர்களுக்கு பிளக்கின் எல்லாம் கிடைக்கிறது .. உபயோகித்து பயனடைவீர் . .

நன்றி . .

வணக்கம்

வணக்கம்

வணக்கம்