எப்பவாச்சும்தான் நெட் கனெக்சன் கிடைக்கும் , ஆனா கிடைக்கற கொஞ்ச நேரத்துல உக்காந்து வலைபதிவ டைப் பன்னி நெட் டையத்த வீணடிக்க விருப்பமில்லாதவர்களுக்கும் , வீக் வை-ஃபை சிக்னலும் லேப்டாப்புமா வலைபதிய மல்லுக்கட்றவங்களுக்கும் ரொம்ப லேட்டா ஒரு அப்டேட் . ‘ஆஃப் லைன் வலைபதிவு எடிட்டர்கள்’ அப்டின்னு ஒரு கொத்து சாப்ட்வேர்க இருக்கு நெட்ல . அதுல ஆப்லைன்ல டைப்பி முடிச்சுட்டு . நெட் கிடைக்கற நேரத்துல நம்ம பிளாகுக்கு எல்லாத்தையும் சின்க்/ப்திவேத்திக்க பன்னிக்க முடியும் .
ரொம்ப காலம் முன்னாடி performancing firefoxன்னு ஒரு எக்ஸ்டன்ஷன் இருந்தது . அப்புறமா அது பேர scribe fireன்னு மாத்தி ரொம்ப அட்டகாசமா அப்டேட் பன்னிட்டாங்க . நாந்தான் அத பத்தி எழுதுன பழைய போஸ்ட்டயும் ( ஏன் இந்த பிளாகயும் கூட ) அப்டேட் பன்னாமயே சுத்திட்டிருந்தேன் . இப்ப அதுல எதுனா அட்வாண்சாயிருக்கான்னு எட்டிபாத்தப்ப நம்ம மைக்ரோசாப்ட் களத்துல குதிச்சிருக்கறது தெரிய வந்தது . "விண்டோஸ் லைவ் ரைட்டர்"ன்னு பேரு . நல்லாதான் இருக்குது . பெர்பார்மன்சிங்/ ஸ்கிரைப் பயர் ரெண்டுலயும் தமிழ்ல டைப் பன்னா எழுத்து ரெண்டரிங் பிரச்சனை இருக்கும் , ‘தி’ அடிச்சா ‘த’ அப்புறம் கொம்பு தனியா வரும் . அந்த கடுப்பு இப்ப லைவ் ரைட்டர்ல இல்ல . இதுலயே படம் வீடியோ டேபிள் எல்லாத்தயும் டிசைன் பன்னிட்டு அப்புறம் மொத்தமா அப்லோட் பன்ற வசதில்லாம் இருக்கு .
இதுவரை கண்டுபுடிச்ச சாப்ட்வேர் லிஸ்டு இதுதான் .
Microsoft Windows Live Writer (Windows) – Price: Free – ந்ல்லாருக்கு
Blogger for Word – பிளாகர்.காம் அதிகாரபூர்வ பிளக்-இன்
Qumana Blog Editor (Windows/Mac OS X) – Price: Free – இன்னும் டிரை பன்னல
Post2Blog (Windows) – Price: Free ‘ ‘
BlogDesk (Windows) -Price: Free - ‘ பிளாகர் டிசைன் டெம்பிளேட்ச கெடுத்துரும்ன்னு கேள்வி ‘
ScribeFire (Firefox Extension) – Price: Free – தமிழ்ல டைப் பன்றதுன்னா பிரச்சனை , ஆனா பயர்பாக்ஸ் பிளக்கின் இது , தனியா இன்ஸ்டால் பன்ன தேவையில்ல
w.bloggar (Windows) – Price: Free – ஏகப்பட்ட சர்வீச சப்போர்ட் பன்னும் .
இதுல w.bloggar , BlogDesk , Live Writter இதுக்கெல்லாம் நல்ல ரசிகர் பட்டாளம் இருக்கு , லினக்ஸுக்கு தான் ஸ்கிரைப் பயர விட்டா வேற கதி இல்ல போலிருக்கு . மேக்கின்டோஷுக்கு ECTO , Journier ன்னு சில நல்ல எடிட்டர் இருக்கு . FLOCK ங்கற ஒரு பயர்பாக்ஸ் மாதிரி பிரவுசருக்குள்ள ஒரு இன்-பில்ட் பிளாக் எடிட்டர் இருக்கு .
இன்னும் பைசா போட்டு வாங்கவேண்டிய சாப்ட்வேர்க சில / ஷேர்வேர் கொஞ்சம் எல்லாம் இருக்கு , அதெல்லாம் லிஸ்ட்ல சேத்துக்கவே இல்ல
.
வலைபடிப்பாளர் சமுதாயம் இத்த கண்டுகினு பயன்பெறட்டும்னு பணிவா கேட்டுக்கிறேன் .
8:38 மு.பகல் இல் டிசம்பர் 4, 2008
thank you
9:17 மு.பகல் இல் டிசம்பர் 4, 2008
wow..that’s a great news….thanx
anbudan aruna
10:53 மு.பகல் இல் டிசம்பர் 5, 2008
ரொம்ப நன்றி